சேலத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்: பறை இசை, பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு

சேலத்தில் நாளை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாம் குறித்து பறை இசை, பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-09-11 15:00 GMT

சேலம் அரசு மருத்துவமனை வாளகத்தில் நடைபெற்ற பறை இசை கலைஞர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கொரனா பாதிப்பில் இருந்து பாதுகாத்திடும் வகையில் தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதற்காக முகாம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேலம் அரசு மருத்துவமனை வாளகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பறை இசை கலைஞர்கள் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்தும், நாளை நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதே போன்று தனியார் அமைப்பின் சார்பில் பொம்மலாட்டம் மூலமாகவும், விலங்குகள் போன்று உடை அணிந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மருத்துவர்கள், செவிலியர்கள், கள பணியாளர்கள் என அனைவரும் உறுதி மொழி ஏற்று கொண்டனர்.

Tags:    

Similar News