ஆவண படுகொலைகளை தடுக்கும் சட்டம் நிறைவேற்ற வேண்டும்: கொளத்தூர் மணி

ஆவண படுகொலைகளை தடுக்கும் சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பேட்டி.

Update: 2021-09-01 09:45 GMT

கொளத்தூர் மணி (பைல் படம்)

சேலத்தில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பவதாரணி - மணி ஆகியோரின் ஜாதி மறுப்புத் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கொளத்தூர் மணி, நாடு முழுவதும் தற்போது சாதிமறுப்பு திருமணங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களின் பாதுகாப்பு இன்றளவிலும் கேள்விக்குறியாகவே உள்ளதாக தெரிவித்த அவர், ஜாதி மறுப்பு திருமணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு கடந்த 2009 இல் ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் அச்சட்டம் 12 ஆண்டுகள் ஆகியும் முழுமையாக நடைமுறை படுத்தவில்லை. இதனால் தமிழகத்திலாவது உடனடியாக இச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதன்படி சிலர் தண்டிக்கப்பட்டால் மட்டும் தான் தவறு செய்ய மற்றவர்கள் பயப்படுவார்கள் என்ற அவர் தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் தங்களது கடமைகளை சரியாக செய்தாலேயே பெண்களுக்கு எதிரான பாதி குற்றங்கள் குறைந்து விடும் என்றார். 

Tags:    

Similar News