புனித வெள்ளி- குழந்தை ஏசு ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

Update: 2021-04-02 07:45 GMT

புனித வெள்ளியை ஒட்டி சேலம் குழந்தை ஏசு பேரலாயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் அரிசிபாளையம் குழந்தை ஏசு பேராலயத்தில் தவசுக்காலம் தொடங்கிய நாள் முதல் தினமும் திருப்பலி, சிறப்பு ஜெபம், குருத்தோலை நிகழ்வு, சிலுவைபாதை போன்ற பிரார்த்தனைகள் நடந்து வருகிறது. மேலும் புனித வாரத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புனித வெள்ளியான இன்று அரிசிபாளையம் குழந்தை ஏசு பேரலாயத்தில் பங்குதந்தை ஜோசப் லாசர் தலைமையில் திருச்சிலுவை பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.சிலுவைப்பாதை வழிபாடுகளை, வீதிகளில் ஊர்வலமாக சென்று 12 சிலுவை பாடுகளை தத்ரூபமாக நடித்து காட்டினர். இந்த நிகழ்வில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிலுவை பாதை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

Tags:    

Similar News