கொரோனா ஊக்கத்தொகை வழங்க கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வலியுறுத்தி கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-21 11:00 GMT

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள்.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் கிராம வங்கி ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கங்களுக்கான சந்தாவை இதுவரை வங்கி நிர்வாகம் சம்பள பணத்திலிருந்து பிடித்தம் செய்து சங்கங்களுக்கு வழங்கியது. தற்போது அது நடைமுறைப்படுத்தவில்லை. இதற்காக நீதிமன்ற உத்தரவு இருந்தும் சந்தா தொகையை வழங்காமல் வங்கி நிர்வாகம் செயல்படுகிறது என்றும், பழைய நடைமுறையில் சந்தா தொகையை வங்கி நிர்வகமே வசூலித்து சங்கங்களுக்கு தரவேண்டும்.கொரோனா கால ஊரடங்கு காலத்தில் தனது சொந்த செலவில் வங்கி பணியாற்றிய கிராம வங்கி ஊழியர்களுக்கு வங்கி நிர்வாகம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் வங்கி நிர்வாகம் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News