அரசு மருத்துவமனை உணவுப்பொருள் டெண்டரில் முறைகேடு என ஆட்சியரிடம் புகார்

உணவு பொருள் டெண்டரில், அரசு மருத்துவமனை முதல்வர் முறைகேடி புரிந்ததாக, சேலம் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2021-07-21 07:15 GMT

அரசு மருத்துவமனையில் உணவு பொருள் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக, மருத்துவமனை முதல்வர் மீது புகார் கூறி, சேலம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான புறநோயாளிகளும், உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு, டெண்டர் கோரப்பட்டு, அதன் அடிப்படையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே ஒப்பந்தத்தை பெற்றுள்ள மகேஸ்வரி, அவரது கணவர் வெங்கடேஷ் ஆகியோர், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு, அரசு மருத்துமனையில் உணவுப்பொருட்கள் சம்பந்தமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, முறையாக நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. இச்சூழலில், தற்போது, புதிய ஒப்பந்தம் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டது. கடந்த 24ஆம் தேதி டெண்டர் சரிபார்பின்போது,  மிகக்குறைந்த விலையில் அனைத்து விதமான ஆவணங்களும் சரியாக சமர்ப்பிக்கப்பட்ட]போதும், அரசு மருத்துவமனை முதல்வர், தனக்கு தேவையான நபருக்கு, அதிகவிலை கேட்டிருந்தும் ஒப்பந்தம் அளித்துள்ளனர்.

இது குறித்து கேட்டதற்கு, தங்களை விட அவருடைய விலைப்பட்டியல் குறைவாக உள்ளது என தவறான செய்தியைக்கூறி,  செந்தில் முருகன் என்பவருக்கு ஒப்பந்தத்தை அளித்து முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார். இது விதிகளுக்கு முரணானது.  மேலும் உள்நோக்கத்தோடு செய்துள்ள மருத்துவமனை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த விலையில் ஒப்பந்தம் போடப்பட்ட எனக்கு ஒப்பந்தத்தை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News