தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணியினருடன் போலீசார் வாக்குவாதம்

சேலத்தில் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்த செல்ல முயன்ற இந்து முன்னணியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2021-09-10 07:15 GMT

சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தும் போலீசார்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் சேலம் எல்லை பிடாரி அம்மன் கோவில் பகுதியில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்து முன்னணியினர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்ல முயற்சித்தனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பொது இடத்தில் வைக்கவும், ஊர்வலத்திற்கும் அனுமதி இல்லை என்று கூறியதால் இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்து முன்னணி சேலம் மண்டல தலைவர் சந்தோஷ்குமார் சிலையை தனது கடைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியதால், ஒரு நபரை மட்டும் அனுமதித்தனர். இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News