சேலத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு

கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி திறந்து பார்த்தபோது விளையாட்டு பொருட்கள் இருந்ததால் நிம்மதி அடைந்தனர்.;

Update: 2021-08-27 09:30 GMT

ஆளில்லாத இடத்தில் பெட்டியை திறந்த வெடிகுண்டு நிபுணர்.

சேலம் மாநகர் சத்திரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் அச்சத்தில் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர. இதனை அடுத்து சேலம் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் எட்வேர்ட் தலைமையிலான குழுவினர் கேட்பாரற்று கிடந்த பெட்டியினை மெட்டல் டிடெக்டர் மூலம் ஆய்வு செய்து, அதில் வெடிகுண்டு இல்லை என தெரிந்து கொண்டனர். இதனையடுத்து, பாதுகாப்பான முறையில் அப்பெட்டியினை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று திறந்தனர். அதில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருட்கள் மட்டுமே இருந்ததை கண்டு வெடிகுண்டு நிபுணர்கள் நிம்மதி அடைந்தனர் . தொடர்ந்து அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில்  விளையாட்டுப் பொருட்களை பெட்டியில் வைத்து பீதியை ஏற்படுத்திய மர்ம நபர் யார் என்பது குறித்து பள்ளப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Tags:    

Similar News