சேலம்: மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரண உதவி

சேலத்தில், மாற்று திறனாளி குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2021-06-21 08:40 GMT

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் தேமுதிக சார்பில் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரோனோ பெருந்தொற்று  அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், கூலி தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வேலையிழந்து வருமானம் குறைந்து, பலரும் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் வேலை இழந்து வறுமையில் வாடி தவிக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு, தேமுதிக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக சேலம் மாநகரம் பள்ளப்பட்டி பகுதி 25, 26 வது வார்டு  பகுதியில் வாழும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு  மாநகர மாவட்டம் தேமுதிக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சேலம், செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,  சேலம் மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அப்பகுதியில் வேலை இழந்து வறுமையில் வாடித்தவிக்கும் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு  சுமார் 1 லட்சம் மதிப்பில் அரிசி பருப்பு எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கினார்.

Tags:    

Similar News