சேலத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு, மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சேலத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2021-08-26 12:15 GMT

சேலம் தனியார் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனோ தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் செப்.1ம் தேதி முதல் 9, 10, 11, மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்பட உள்ளது.

இதையடுத்து பள்ளி வளாகங்களில் சுத்தம் செய்தல், வகுப்பறைகளில் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் நாற்காலிகள் மற்றும் இருக்கைகள், ஆசிரியர் பயன்படுத்தும் மேசை, நாற்காலிகள் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் கதவுகள் ஜன்னல்கள், ஆகியவற்றிற்குத் கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட  தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கிருமி நாசினி மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை இன்று மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ்  ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News