திருப்பத்தூர் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.;
திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது, அதிமுக தொண்டர்கள் அங்கே முகாமிட்டிருந்தனர். அப்போது, காவல்துறையினருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு செய்தி வழங்கிக்கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களையும் பணி செய்யவிடாமல் தடுத்து அவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
செய்தியாளர்கள் மீதான இந்த தாக்குதலை கண்டித்து மாவட்டந்தோறும் உள்ள செய்தியாளர் சங்கங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் அனைத்து செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர்களை தாக்கியவர்கள் மீது தாமதமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.