இந்து ஆலயங்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

பண்டிகை நாட்களில் இந்து ஆலயங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி தர வேண்டும் என சேலத்தில் இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2021-08-06 13:00 GMT

இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

கொரானா தொற்று காரணமாக பல்வேறு வழிகாட்டுதல்கள் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பக்தர்கள் அதிகமாக கூடும் கோவில்களில் நடை சாத்தப்பட்டு பண்டிகைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்து கோயில்கள் பெரும்பாலான இடங்களில் மூடப்பட்டுள்ளது. பக்தர்கள் நேரடியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  தமிழக அரசு சிறுபான்மை மக்களாக கருதப்படும் கிறிஸ்துவர் மற்றும் முஸ்லிம்கள் வழிபடும் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் பக்தர்கள் வழிபட மட்டும் அனுமதி அளித்துவிட்டு இந்துக் கோயில்களை மட்டும் கொரானா தொற்று காரணமாக பக்தர்களுக்கு தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினர்.

எனவே வரும் ஆடி அமாவாசை மற்றும் ஆடி 28 ஆகிய முக்கிய நாட்களில் இந்து கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஆலய பிரதேசத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்து கண்டன கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Tags:    

Similar News