தனியார் பரிசோதனை நிலையத்திற்கு சீல் –சேலம் மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை..!

முறையான அனுமதியின்றி செயல்படும் கொரோனா பரிசோதனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை.;

Update: 2021-06-22 16:49 GMT

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்

முறையான அனுமதியின்றி செயல்படும் கொரோனா பரிசோதனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்று அறிகுறியுள்ளவர்களுக்கு சளி தடவல் பரிசோதனை அரசு மருத்துவமனைகள், மாநகராட்சியின் சிறப்பு சளி தடவல் மையங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பரிசோதனை நிலையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்ப்பேட்டை மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சளி தடவல் சேகரிப்பு மையம் உரிய அனுமதியின்றியும், உரிய கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்டதால் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சளி தடவல் சேகரிப்பு நிலையத்தினை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காமலும் செயல்படும் பரிசோதனை நிலையங்கள் மற்றும் சளி தடவல் சேகரிப்பு மையங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News