பா.ஜ.க கல்யாணராமனுக்கு கொரோனா தொற்று உறுதியானது

சிறையில் இருக்கும் பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினரான கல்யாணராமனுக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதியானது.;

Update: 2021-04-11 05:30 GMT

சென்னை, மண்ணடி, தம்புசெட்டி வீதியை சேர்ந்தவர் கல்யாணராமன். பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினரான இவர் கடந்த ஜனவரியில் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதால், போலீசார் கைது செய்து கோபி கிளை சிறையில் அடைத்தனர்.

அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்ததால், போலீஸ் பாதுகாப்புடன், அன்றிரவு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொண்ட சோதனையில், கொரோனா இருப்பது நேற்று உறுதியானது. இதனால் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். அங்கு 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News