சேலத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்: விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்த ஆட்சியர்

சேலத்தில் நடைபெறவுள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் குறித்து விளக்கும் வகையில் விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Update: 2021-09-10 12:00 GMT

சிறப்பு தடுப்பூசி முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனங்களை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில், சேலம் மாவட்டம் முழுவதும் 1,235 வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், என மொத்தம் 1,356 இடங்களில் தடுப்பூசி போட சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக மாவட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இந்த சிறப்பு தடுப்பூசி முகாம் குறித்த தகவலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில்  விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த வாகனங்கள் மாவட்டம் முழுவதும் சென்று, பொதுமக்களிடையே தேர்தலைப் போலவே வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட பூத் சிலிப் வழங்கப்படும் இதனை பெற்றுக்கொண்டு அந்தந்த மையங்களுக்குச் சென்று அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

Tags:    

Similar News