சேலத்தில் பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

சேலத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-07-28 09:45 GMT

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே, தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நலிவடைந்து வரும் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை மேம்படுத்த, 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர், இன்று  அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே உள்ள செல்போன் கோபுரங்களை மேம்படுத்தி 4ஜி சேவை தொடங்கப்பட வேண்டும் அதேபோல 5ஜி சேவைகளை தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாளன்று ஊதியம் வழங்க வேண்டும், கண்ணாடி இழை வயர்கள் மற்றும் கோபுரங்களை பணமாக்க முயற்சிக்கக்கூடாது, காலியாக உள்ள நிலங்களை பணம் ஆக்குவதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன்களை அடைத்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகள், \உண்ணாவிரதத்தில் வாயிலாக வலியுறுத்தப்பட்டன.

Tags:    

Similar News