உடைந்த குடிநீர் குழாய்: ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பாதாள சாக்கடைத் திட்டப்பணியின் போது உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி ஒப்பந்ததாரரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-08-30 08:15 GMT

சேலம் அணைமேடு பகுதியில் ஒப்பந்ததாரை முற்றுகையிட்ட பொதுமக்கள். 

சேலம் மாநகராட்சி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேலம் அணைமேடு பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளுக்காக குழி தோண்டிய போது குடிநீர் குழாய் உடைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யாமல் பணியாளர்கள் குழியை மூட முயன்றதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் குழாய் உடைக்கப்பட்டது குறித்து  மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தபோது, சேதமடைத்த குழாய்களை ஒப்பந்ததாரர் வாங்கி கொடுத்தால் சீரமைத்து தருவதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்காமல் பணிகளை தொடங்க விடமாட்டோம் என்று ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News