சேலத்தில் நடைபெற்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் கிருமி நாசினி மற்றும் கையுறை அணிந்து வழக்கறிஞர்கள் , நீதிபதிகள் வாக்களித்தனர்.
சேலம் வழக்கறிஞர் சங்க தேர்தல், நீதிமன்ற வளாகத்தில் தேர்தல் நடத்தும் குழுவின் தலைவரான மூத்த வழக்கறிஞர் மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்றது. தலைவர், துணைத்தலைவர் , செயலாளர், துணை செயலாளர், நூலகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.இன்று நடைபெற்று வரும் வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் தகுதியான வாக்காளர்கள் மற்றும் நீதிபதிகள் சமூக இடைவெளியுடன் கிருமிநாசினி பயன்படுத்தி, கையுறை அணிந்து கொண்டு தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் வாக்களிக்க வந்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.