எல்இடி வீடியோ மூலம் வாக்காளர் விழிப்புணர்வு
சேலத்தில் 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் எல்இடி வீடியோ மூலம் விழிப்புணர்வு;
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021ல் 100% வாக்குப் பதிவினை வலியுறுத்தும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட கூடுதலாக 3 மினி எல் இ டி வீடியோ விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.