சேலத்தில் சுகாதார பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி மேற்கொள்ளும் சுகாதார பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.;

Update: 2021-08-28 06:30 GMT

சேலம் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனையொட்டி சேலம் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமையில்  நடைபெற்றது.

கொசுப்புழு கண்டறிதல், கொசு மற்றும் கொசு புழுக்களை அழித்தல், புகை மருந்து, திரவ மருந்து உபகரணங்களை கையாளுதல் குறித்து பணியாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வீடுகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உரல் கற்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இளநீர் தொட்டிகள் ஆகியவற்றை அகற்றி வீட்டின் உரிமையாளர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற வழிகாட்டுதல் நடைமுறைகள் குறித்தும் செயல்முறை விளக்கங்களோடு பணியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

Tags:    

Similar News