கலாம் நினைவு தினம்: சேலத்தில் 25 மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கல்
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளை ஒட்டி, சேலத்தில் அரசு பள்ளி 25 மாணவியர்கள் 25 பேருக்கு, தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.;
சேலத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சார்பில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவுத்தினம் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் ஏழை மாணவியர் 25 பேருக்கு கல்வி ஊக்கத்தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்ட்டது.
இதை தொடர்ந்து அப்துல் கலாம் அறிவுரைகேற்ப பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலாமின் அறிவுரைகள், கருத்துகளை பலரும் நினைவு கூர்ந்தனர்.