நகர்நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.

Update: 2021-04-16 12:45 GMT

சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலராக மருத்துவர் பார்த்திபன் தற்போது பணியாற்றிவருகிறார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் இவர் ஆங்காங்கே கொரோனா சிகிச்சை முகாம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு இல்லத்தில் குடியிருக்கும் அவரது வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டிலுள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதோடு உடனடியாக விசாரணையை துவக்கியுள்ளனர். மருத்துவர் பார்த்திபன் மதுரையில் பணியாற்றியபோது மருந்து கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக ஏற்கனவே இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்த விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். மதுரையை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரும் சேலத்தைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரும் தற்போது விசாரணையில் ஈடுபட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News