மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கிய நடிகர் பெஞ்சமின்!

கொரோனா லாக்டவுனில் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடிகர் பெஞ்சமின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

Update: 2021-06-14 08:30 GMT

சேலத்தில்,  மாற்றுத்திறனாளிகளுக்கு 15 வகையான நிவாரணப்பொருட்களை, நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் வழங்கினார்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாற்றுத்திறனாளிகளும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அரசு மற்றும் தன்னார்வலர்கள் ஏழை,எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மத்திய சிறைச்சாலையின் முன்பு நடந்த நிகழ்ச்சியில், திரைப்பட நகைச்சுவை நடிகர் பெஞ்சமின், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கினார். அரிசி, காய்கறி உள்ளிட்ட 15 வகையான நிவாரண பொருட்களை 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர் வழங்கினார்.

அத்துடன், இந்த ஊரடங்கு உத்தரவு முடியும் வரை, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தொடர்ந்து இத்தகைய நிவாரணப்பொருட்கள் வழங்கப்படும் என்று, நடிகர் பெஞ்சமின் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News