சேலத்தில் அரசு உதவித் தொகை பெற்று தர லஞ்சம் கேட்பதாக கூறி 10க்கும் மேற்பட்ட முதியவர்கள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் பள்ளப்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவி தொகை கேட்டு ஏராளமானோர் சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் அரசு உதவி தொகை பெற்று தர லஞ்சம் கேட்டு அலைக்கழிப்பதாக கூறி,சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 10க்கும் மேற்பட்ட முதியோர்கள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விஏஓ.,வின் உதவியாளர் பாலு, வருவாய் அதிகாரியின் உதவியாளர் சிவா மற்றும் வட்டாட்சியர் உதவியாளர் மணிகண்டன் ஆகிய மூவரும் உதவித் தொகை பெற்று அதிகாரிகளுக்கு கொடுத்து கையெழுத்து பெற விண்ணப்பித்தவர்களிடம் தலா ரூ. 7 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டினர். மேலும் அது குறித்த ஆடியோவும் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.