திமுகவிற்கு சாதகம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

விவசாய கடன், நகை கடன், கல்விக் கடன் ரத்து என்ற திமுகவின் அறிவிப்பால் இதுவரை அதிமுகவிற்கு சாதகமாக வீசிக்கொண்டிருந்த காற்று திமுக பக்கம் திரும்பியுள்ளதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2021-02-05 07:45 GMT

விவசாய கடன், நகை கடன், கல்விக் கடன் ரத்து என்ற திமுகவின் அறிவிப்பால் இதுவரை அதிமுகவிற்கு சாதகமாக வீசிக்கொண்டிருந்த காற்று திமுக பக்கம் திரும்பியுள்ளதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கள்ளுக்கு விடுதலை கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் நூதன போராட்டம் சேலத்தில் இன்று துவங்கியது. இதனை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி துவக்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நல்லசாமி, கள்ளுக்கு விடுதலை கேட்டு இன்று முதல் முதலமைச்சருக்கு ஆயிரக்கணக்கான கடிதங்களை அனுப்ப இருப்பதாகவும், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் வரை கடிதங்கள் அனுப்பப்படும் என்றார். கள்ளுக்கு விடுதலை அளித்தால் மட்டுமே அதிமுக ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என தெரிவித்த அவர், தடையை மீறி நாளை விழுப்புரம் மாவட்டத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். மேலும் இதுவரை அதிமுகவிற்கு சாதகமாக வீசிக்கொண்டிருந்த காற்று திமுகவின் விவசாய கடன், நகை கடன், கல்விக் கடன் ஆகியவை ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பால் திமுக பக்கம் திரும்பியுள்ளதாகவும், வரும் தேர்தலில் முதல் இரண்டு அணிகளில் எந்த அணி கள் மீதான தடையை நீக்க உறுதி அளிக்கிறதோ அந்த அணிக்கு ஆதரவு தர உள்ளதாகவும் தெரிவித்தார்.


Tags:    

Similar News