கம்பி மற்றும் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் மனைதொழில் கூட்டமைப்பு சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஹேமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உயர்ந்து வரும் கம்பி மற்றும் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க அரசு முன்வர வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை நிர்ணயக் குழுவினை அமைக்க வேண்டும், அங்கீகாரமற்ற மனைகளை வரைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.