குடியரசு தினவிழாவில் சைக்கிள் பேரணி
72 ஆவது குடியரசு தினவிழாவை போற்றும் விதமாக இளைஞர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி 72 கிலோமீட்டர் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.;
72 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சேலம் சைக்கிளிங் கிளப் சார்பில் இளைஞர்கள் 17 பேர் கொண்ட குழுவினர் குடியரசு தினத்தை போற்றும் விதமாகவும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.
சேலம் காந்தி ரோடு பகுதியில் துவங்கிய இந்த சைக்கிள் பேரணி பயணம் மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் இரும்பாலை சாலை தாரமங்கலம் வழியாக ஓமலூர் சென்று அஸ்தம்பட்டி பகுதியை வந்தடைந்தது. இந்த சைக்கிள் பேரணியை மேற்கொண்ட இளைஞர்கள் தேசிய இறையாண்மை போற்றும் வகையில் முழக்கங்களை எழுப்பிய படி வழி பயணித்தனர். உலக சாதனை முயற்சியாக இந்த சைக்கிள் பேரணியில் ஈடுபட்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.