நடைபாதை குப்பை சேகரிக்கும் பணி மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு

Update: 2020-12-27 03:00 GMT

சேலம் காரிமேட்டில் நடைபாதை குப்பை சேகரிக்கும் பணி நடைபெற்றது. இதில் மாநகராட்சி மற்றும் மாநகர காவல் ஆணையாளர்கள் பங்கேற்றனர்.

சேலத்தை தூய்மையான மாநகரமாக மாற்ற மாநகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக நடை பயிற்சியின்போது நடைபாதை குப்பைகளை அகற்றும் பணி வார விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணி குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறை சார்பில் கோரிமேடு முதல் செட்டிசாவடி வரை நடைபாதை குப்பைகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது.

இதில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார், துணை ஆணையர்கள் செந்தில், சந்திரசேகர் மற்றும் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட காவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நடைபாதை குப்பைகளை அகற்றினர்.சேலம் பிளாகிங் பணியில் இளைஞர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தங்கள் பகுதியை சுகாதாரமான தூய்மையான பகுதியாக திகழச்செய்ய முன்வர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News