சேலம்: வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் ஏரியில் கரைப்பு

Update: 2021-09-10 14:00 GMT

சேலத்தில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் மூக்கனேரியில் கரைக்கப்பட்டது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, இன்றைய தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சேலத்திலும்,  விநாயகர் சதுர்த்தி விழா, தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி பொது இடங்களில் சிலைகளை வைக்காமல், வீடுகளில் சிலைகளை வைத்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். 

இந்நிலையில், சேலம் மாநகர பகுதிகளில், வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்கும் பணி இன்று மாலையில் துவங்கியது. அதன்படி, கிச்சிப்பாளையம், டவுன், பட்டை கோயில், அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மூக்கனேரியில் கரைக்கப்பட்டன.

Tags:    

Similar News