மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 853 கன அடியாக அதிகரிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை (ஜூன்.8) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 529 கன அடியிலிருந்து 853 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை (ஜூன்.8) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 529 கன அடியிலிருந்து 853 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை 120 அடி உயரம் கொண்டது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் வினாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு 2,000 அடியாக அதிகரித்துள்ளது. இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று (ஜூன்.7) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 529 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.8) சனிக்கிழமை வினாடிக்கு 853 கன அடியாக அதிகரித்துள்ளது.
குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று காலை 44.62 அடியாக இருந்து நீர்மட்டம், இன்று காலை 44.41 அடியாக குறைந்தது. அப்போது, நீர் இருப்பு 14.47 டிஎம்சியாக இருந்தது.