சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனோ உயிரிழப்புகள்
சேலத்தில், கொரோனோ உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரானா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. தினந்தோரும் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 5 நாட்களாக தொடர்ந்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் 10 பேர் உயிரிழந்ததாக, மாவட்ட சுகாதார துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நேற்று மட்டும் 547 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானாவுக்கு சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்ததாகவும் மாவட்ட சுகாதார சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த 5 நாட்களாக தொடர்ந்து தினந்தோறும் 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அது இரு மடங்காக உயர்ந்திருப்பது சேலம் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரானா நோய்தொற்று ஏற்பட்டு 520 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.