கணவனுக்கு ஜாமின் வழங்ககோரி 6 மாத குழந்தையுடன் பெண் தீ குளிக்க முயற்சி
கஞ்சா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கணவனுக்கு ஜாமீன் கிடைக்க நடவடிக்கை எடுக்ககோரி 6 மாத குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி.;
குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண்.
சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கேட்டு அவரது மனைவி மரகதம் பலமுறை மனு அளித்தும் ஜாமீன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் கணவருக்கு ஜாமீன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி தனது 6 குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மரகதம் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை குழந்தைகள் மீதும், அவர் மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி டவுன் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் கணவர் ஜாமினில் வெளிவர முடியாத சூழ்நிலையில் இருப்பதால் வருமானமின்றி குடும்பம் நடத்த முடியாமல் தனது 6 குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தார்