இடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பித்து தருவேன்: சிபிஎம் வேட்பாளர்

சேலம் மாநகராட்சி 60வது கோட்டத்தில் இடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பித்துத் தரப்படும் என குறிப்பிட்டு சிபிஎம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2022-02-10 02:56 GMT

பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சிபிஎம் வேட்பாளர் எம்.சி. சேகர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சி 60வது கோட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். சி. சேகர் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சிநகர் சின்னையன் காலனி பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது சீலநாயக்கன்பட்டியில் இடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  தனக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொண்டார். 

Tags:    

Similar News