சேலம் மாநகராட்சியில் ஜன.5 & 6ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
சேலம் மாநகராட்சியில், ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.;
சேலம் மாநகராட்சியின் குடிநீர் திட்டம் செயல்படும் நங்கவள்ளி நீரேற்று நிலையம் மற்றும் கோம்பூர்காடு, தொட்டில்பட்டி ஆகிய பகுதிகளில், 05.01.2022 புதன்கிழமை மற்றும் 06.01.2022 வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, மேற்கண்ட இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.