நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலத்தில் வேட்பு மனுக்களை பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை பெற்று சென்றனர்.

Update: 2022-01-28 08:30 GMT

சேலத்தில் வேட்பு மனுக்களை பெற்று சென்ற சுயேட்சை வேட்பாளர்கள்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் 699 கவுன்சிலர்கள் பதவிக்கு வரும் 19ஆம் தேதி 1,519 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியது.

முதல் நாளான இன்றைய தினம் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு படிவங்களைப் பெற்றுச் சென்றனர். நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் நபர்கள் கூட்டமாக வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு தேர்தல் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News