யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி தேர்வும் தமிழில் நடத்தணும்: ஜனநாயக வாலிபர் சங்கம்

நீட்டை போன்று யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2021-11-30 12:30 GMT

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ரஹூம்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. அகில இந்திய தலைவர் ரஹூம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில தலைவர் ரெஜிஸ்குமார், மாநில செயலாளர் பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய தலைவர் ரஹூம், தமிழகத்தில் நீட் தேர்வை தமிழில் நடத்துவது போல மத்திய அரசின் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டி தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும் என்றார். 

மேலும் தமிழகத்தில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், புதிய குழு அமைத்து வேலை வாய்ப்பை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரவித்தார். தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஆணவப்படுகொலை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுத்து நிறுத்தும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி, வரும் டிசம்பர் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என  ரஹூம் தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசின் மதரீதியாக மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிசம்பர் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றார். 

தமிழகத்தில் கொரோனாவை தொடர்ந்து கனமழையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநில அரசு கோரியுள்ள நிதியை முழுவதுமாக மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News