பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் அஞ்சலி

சேலத்தில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2022-03-07 07:15 GMT

சேலத்தில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில், தி.மு.க மறைந்த பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி சேலம் கலைஞர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அன்பழகனின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News