சேலத்தில் கலை பண்பாட்டு துறையினரின் முப்பெரும் விழா, கலை நிகழ்ச்சிகள்
கலை பண்பாட்டு துறை சார்பில் சேலத்தில் நடந்த முப்பெரும் விழாவில் பிரபல இசை மற்றும் நடன கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கலை பண்பாட்டு துறை சார்பில் சேலத்தில் தமிழிசை விழா, மாவட்ட அரசு இசைப்பள்ளியின் 24 ஆம் ஆண்டு விழா, 75 ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா துவக்கி வைத்தார்.
இதில் பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி விருதுகளை பெற்ற தமிழ்நாடு அரசு மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் தமிழிசை நடனமாடினார்.பத்மஸ்ரீ, கலைமாமணி மற்றும் சங்கீத கலாநிதி விருதுகளை பெற்ற வலையப்பட்டி சுப்பிரமணியன் நாதஸ்வர தவிலிசையை நிகழ்த்தினார். தொடர்ந்து சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.