சேலத்தில் மகளிர் தினத்தையொட்டி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

சேலத்தில் மகளிர் தினத்தையொட்டி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Update: 2022-03-07 07:15 GMT

உலக மகளிர் தினத்தையொட்டி சேலத்தில் கல்லூரி மாணவிகள் பேரணி நடத்தினர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சேலத்தில் தனியார் மகளிர் கல்லூரி சார்பில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் வெங்கடேசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் துவங்கிய இந்த பேரணியானது பிரதான சாலைகள் வழியாக சென்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. இந்த பேரணி மூலம் அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வரும் நிலையில் பல்வேறு காரணங்களால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பெண்களும் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக மாணவிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News