சேலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை வழங்க கோரி சேலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி சேலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்னர்.
சேலம் அரசு மருத்துவமனையில் 110 பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். பயிற்சி மருத்துவர்களுக்கு மாதம் தோறும் 25000 உதவித் தொகையாக வழங்கப்படும். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே நிலுவையிலுள்ள 3 மாத உதவித் தொகையை ஒரே தவணையாக உடனடியாக வழங்க கோரி 110 பயிற்சி மருத்துவர்களும் பணி புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் அமைதி வழியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 மாத உதவித்தொகை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த பயிற்சி மருத்துவர்கள், முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர்களுக்கும் கடந்த 4 மாதங்களாக வழங்காத உதவித் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.