சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்புமனு நிராகரிப்பு

சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த கல்லூரி மாணவியின் வேட்புமனு வயதின் காரணமாக நிராகரிப்பு.

Update: 2022-02-05 08:45 GMT

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காவ்யா.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்றைய தினம் வேட்புமனு பரிசீலனை அந்தந்த தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த காவியா என்ற கல்லூரி மாணவி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளராக 5 வது கோட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் 21 வயது பூர்த்தியாக நான்கு மாதங்கள் உள்ளதால் அவரது வேட்பு மனுவை  அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து  வேட்புமனு தாக்கல் செய்திருந்த காவியா கூறும்போது, இதற்கு முன்பாக சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் கேட்டபோது 18 வயது பூர்த்தியடைந்து இருந்தாலே வேட்புமனு தாக்கல் செய்யலாம், கவுன்சிலராக போட்டியிடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் காரணமாகவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால் தேர்தலில் போட்டியிடாமல் இருந்து இருப்பேன் என்று கூறினார்.

Tags:    

Similar News