சேலம் அரசு மருத்துவமனை கழிப்பறையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

சேலம் அரசு மருத்துவமனை கழிப்பறையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-02-25 05:45 GMT

பைல் படம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் ராமர். இவர் தலைவாசல் பகுதியில் தனது சகோதரி சரோஜா வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காசநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் இருமல் உடல்வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் கடந்த 20 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை மருத்துவ பிரிவு மூன்றாவது மேல் மாடியில் கழிப்பறைக்குச் சென்று அவர் நீண்ட நேரமாக திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி சரோஜா கழிப்பறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் தான் அணித்திருந்த வேட்டியில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ராமர் தொடர்ந்து காச நோயால் பாதிக்கப்பட்டு வந்ததும், அவரது குடும்பத்தில் சிலருக்கு காசநோய் இருந்தால் பெரும் மன உளைச்சலுக்கு இருந்து வந்ததும் தெரியவந்தது. இதன் காரணமாக இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பிரேதத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News