சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி: 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சேலத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

Update: 2021-12-03 07:15 GMT

சேலத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சேலத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

சேலம்  மாவட்டம் பாரா ஒலிம்பிக் சங்கம் சார்பில்  நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிகளில் சிறப்பு விருந்தினராக மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.  இதில் 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், 25 மீட்டர் வீல்சேர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில் சேலம் மாவட்டத்திலிருந்து கண், காது, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் கை, கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் என 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News