சேலம் - சென்னை விமான சேவை இம்மாத இறுதியில் மீண்டும் துவக்கம்: எம்.பி. தகவல்

சேலம் - சென்னை இடையேயான விமான சேவை இந்த மாத இறுதியில் மீண்டும் துவங்கப்படும் என ஆலோசனை குழு தலைவர் பார்த்திபன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-11 09:45 GMT

சேலம் விமான நிலைய வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம். 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில், மத்திய அரசின் உதான் திட்டத்தில் இயக்கப்பட்ட சேலம் - சென்னை பயணியர் விமான சேவை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே திட்டத்தில் மீண்டும் விமான சேவையை தொடர விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சேலத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதையடுத்து சேலம் விமான நிலைய வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சேலம் விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் பார்த்திபன் எம்.பி. தலைமையில் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சேலத்தில் இருந்து இரவு நேர விமான சேவையை துவங்க தேவையான பூர்வாங்க பணிகளை உடனடியாக தொடங்குதல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேலம் - சென்னை இடையேயான விமான சேவையை மத்திய விமான அமைச்சகம் தெரிவித்தப்படி இந்த மாத இறுதியில் துவங்குதல், சேலத்திலிருந்து சென்னைக்கு மாலை நேர விமான சேவை தொடங்குதல், சேலத்தில் இருந்து திருப்பதி, ஹைதராபாத், பெங்களூரு, கோவாவிற்கு விமான சேவை துவங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் சேலம் - சென்னை இடையேயான விமான சேவை இந்த மாத இறுதியில் மீண்டும் துவங்கப்படும் என சேலம் விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் பார்த்திபன் எம்.பி. தெரிவித்தார். 

Tags:    

Similar News