சேலத்தில் இரண்டு நாள் காட்சிபடுத்தப்படவுள்ள குடியரசு தின அலங்கார ஊர்திகள்
சேலத்தில் குடியரசு தின அலங்கார ஊர்திகள் இரண்டு நாட்கள் காட்சிபடுத்தப்பட உள்ளது.;
குடியரசு தினவிழா அணிவகுப்புகளில் பங்கேற்ற இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வ.உ.சி மற்றும் ஈ.வெ.ரா பெரியார் அலங்கார ஊர்திகள், சேலம் மாவட்டத்தில் வருகின்ற 03.02.2022 மற்றும் 04.02.2022 ஆகிய இரண்டு நாட்கள் சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது .
அலங்கார ஊர்தியை பொது மக்கள் கண்டு ரசிக்கும் வகையில் கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில் மாலை 5.30 முதல் 7.30 மணி வரை கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது.