சேலம் மாநகராட்சி மேயர்: திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் தேர்வு
சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்;
சேலம் மாநகராட்சி மேயர் திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் தேர்வு.
சேலம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ.இராமச்சந்திரன். 1944ஆம் ஆண்டு பிறந்த இவர், சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர். 1984-ம் ஆண்டு மாவட்ட பிரதிநிதி பதவி, அஸ்தம்பட்டி பகுதி பொருளாளர் பதவி, வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பிறகு அஸ்தம்பட்டி பகுதி கழக செயலாளராக பதவி, கூடுதலாக அஸ்தம்பட்டி பகுதிக்குட்பட்ட மணக்காடு காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் பணியாற்றியவர்.
தனது 77-வது வயதில் சேலம் மாநகராட்சி 6-வது கோட்டத்தில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது சேலம் மாநகராட்சி மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார்