பஞ்சாப் மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தில் ரயில் மறியல்

சேலத்தில் பஞ்சாப் மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-10 07:45 GMT

சேலத்தில் பஞ்சாப் மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரயில் மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர்.

பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாபில் சாலை வழியாக பயணம் செய்தபோது போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பிரதமர் சென்ற கார் மறிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பஞ்சாப் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை ரயில்வே போலீசார் தடுத்து நிறுத்தியதால் நுழைவுவாயில் பகுதியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கட்சியினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன்சம்பத் உட்பட அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News