தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்று ஊர் திரும்பிய தமிழக வீரர்கள் அவமதிப்பு
விளையாட்டு உபகரணங்களை ரயிலில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று கூறியதோடு வீரர் வீராங்கனைகளை ரயிலில் இருந்து இறக்கிவிட்டார்.;
தேசிய தடகள போட்டியில் பதிக்கம் பெற்று ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பிய தமிழக வீரர் வீராங்கனைகளை அவமதித்த ரயில்வே அதிகாரி.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய அளவிலான முதலாவது ஓபன் தடகள விளையாட்டுப் போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்றது.இந்தப்போட்டியில், சேலத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். குறிப்பாக போல்ட் வாட் எனப்படும் உயரம் தாண்டுதல் போட்டியில் சக்தி மகேந்திரன், பவித்ரா, பாலநிஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் வீராங்கனை பவித்ரா தங்கப்பதக்கம் பெற்று தேசிய அளவில் முதலிடத்தை கைப்பற்றியதோடு ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மீதமுள்ள வீரர்-வீராங்கனைகள் முறையே மூன்றாம் இடம் மற்றும் ஆறாம் இடத்தை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளனர்.
இந்த நிலையில் போட்டி நிறைவுற்று திருவனந்தபுரத்திலிருந்து சேலம் நோக்கி வந்த ரயிலில் தங்களது விளையாட்டு உபகரணங்களுடன் பயணித்தனர். அப்போது ரயிலில் வந்த டிக்கெட் பரிசோதனை அதிகாரியான சுஜாதா என்பவர், விளையாட்டு உபகரணங்களை ரயிலில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று கூறியதோடு வீரர் வீராங்கனைகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டராம். மேலும், கொல்லம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினரின் ஒத்துழைபோடு அனைவரையும் ரயிலில் இருந்து கீவே இறக்கி விட்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ட தமிழக வீரர் வீராங்கனைகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, கொல்லம் ரயில்வே அதிகாரிகளுடன் பேசி மாற்று ரயிலின் மூலமாக சேலத்துக்கு அனைவரையும் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கூறும்போது கடந்த பல ஆண்டுகளாக ரயிலில் பயணிக்கும் பொழுது தங்களது விளையாட்டு உபகரணங்களை எடுத்து வருவதில் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் தற்போது புதிதாக விளையாட்டு உபகரணங்களை எடுத்து வர அனுமதி மறுத்ததோடு தங்களை பாதியிலேயே இறக்கிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளை ரயில்வே அதிகாரி அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.