சேலத்தில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-12-13 08:00 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

சேலம் மெய்யனூரில் உள்ள இட்டேரி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மெய்யனூர் பிரதான சாலையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அப் பகுதியில்  ஏற்கனவே ஒரு மதுபானக்கடை  இருப்பதாகவும் அதை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது புதியதாக மற்றுமொரு மதுபானக்கடை திறப்பதால் இருக்கும் தொழில் நிறுவனங்கள் மருத்துவமனை நோயாளிகள், குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படும்.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும்   பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்த  அவர்கள், புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க கூடாது என்று வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.

புதிய மதுபான கடை திறக்கும் திட்டத்தை கைவிடவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.

Tags:    

Similar News