முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்: சேலத்தில் கே.என்.நேரு

ஒமிக்ரானால் ஏற்படும் இறப்பு குறைவு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் -அமைச்சர் கே.என்.நேரு;

Update: 2021-12-23 14:30 GMT

ஒமிக்ரானால் ஏற்படும் இறப்பு என்பது குறைவு என்ற போதிலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். 

சேலத்தில் ஒமிக்ரான் தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, ஒமிக்ரான் குறித்து பல நாடுகளில் பலவிதமான கருத்துகள் நிலவி வரும் நிலையில், ஒமிக்ரானால் ஏற்படும் இறப்பு என்பது குறைவு என்ற போதிலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்ற அமைச்சர் கே.என் நேரு, களப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முதலில் தங்களை பார்த்துக்கொண்டு மக்களை தொற்றிலிருந்து பாதுகாக்க  வேண்டும் என்றார். 

Tags:    

Similar News