சேலம்: குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

சேலம் மாவட்டத்தில் உள்ள 10 லட்சத்து 58 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது.;

Update: 2022-01-04 08:30 GMT
சேலத்தில் பொங்கல் பரிசை பெற்றுச் சென்ற பயனாளிகள். 

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு நியாய விலை கடைகள் மூலம்,  ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ வெல்லம் 1 முழு கரும்பு உள்பட 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள 1601 நியாய விலை கடைகள் மூலம் 10 லட்சத்து 58 ஆயிரத்து 29 அரிசி அட்டைதாரர்களுக்கு 57 கோடி ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள நியாய விலை கடையில்,  மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக நாளொன்றுக்கு ஒரு நியாய விலை கடைக்கு 200 நபர்கள் வரை பரிசு தொகுப்பு வழங்க முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பரிசு தொகுப்பை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News